லேபிள்கள்

சனி, 14 டிசம்பர், 2013

நிலா ஒளி கொடுக்குமா..??



நிலா ஒளி கொடுக்குமா..??


நிலவின் ஒளி என்று இப்பொழுதுள்ள நவீன மக்கள் வாதிப்பது ஒரு அபத்தமான செயல்தான். பைபிளில் நிலவு ஒளி கொடுப்பதாக உள்ளது என்று சிலர் கூறுகின்றனர். அதைத்தானே உங்கள் குரானும் சொல்கிறது நிலவு வெளிச்சம் கொடுக்கும் என்று, அப்படி என்றால் உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவனுக்கு ஒரு நியாயமா..??

 


குரான் 71:15. “ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா,

16. “
இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.

எபிரேய மொழியில் ஒளி மற்றும் பிரதிபலிக்கும் ஒளி இந்த இரண்டிற்குமே ஒரே வார்த்தைதான் பயன்படுத்த படுகிறது. அப்படி இருக்கையில் நிலா வெளிச்சம் கொடுக்கும் அல்லது கொடுக்காது என்று கிறுக்குத்தனமான வாதம் உடலுக்கு நல்லதல்ல..!!

எடுத்துகாட்டாக ஒரு சில வசனத்தை பார்ப்போம் இங்கு பிரதிபலிக்கும் ஒளிக்கும் ஒரே வார்த்தைதான் நீங்கள் எபிரேய வார்த்தை அலசி பாருங்கள்..

நீதிமொழிகள் 15
30
கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்: நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்.

எசேக்கியேல் 32
7
உன்னை நான் அணைத்துப்போடுகையில், வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருண்டுபோகப்பண்ணுவேன், சூரியனை மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன் ஒளியைக்கொடாதிருக்கும்.

8
நான் வானஜோதியான விளக்குகளையெல்லாம் உன்மேல் இருண்டுபோகப்பண்ணி, உன் தேசத்தின்மேல் அந்தகாரத்தை வரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.



மத்தேயு 24
29
அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.


நிலாவும் சூரியனும் ஒளி கொடுப்பதை ஒரே வார்த்தையால் எபிரேயத்தில் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் குரானிலும் நிலா ஒளி கொடுப்பதாக சொல்லப்பட்டுள்ளது இதை எதை கொண்டு விளக்க போகிராகளோ தரியவில்லை..

குரான் 41:12. ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக