இயேசுவும் இம்மானுவேலும்
இயேசுவும் இம்மானுவேலும் ஒரே நபரா என்ற கேள்வி பலருக்கு எழுகிறது குறிப்பாக கிறிஸ்த்தவத்தை சாராத நண்பர்களுக்கு அதிகம் எழுகிறது.
இப்பொழுது இந்த இரண்டு பெயரிலும் உள்ளவர்கள் ஒரே நபரா அல்லது இரண்டு
நபர்களா என்பதை பார்ப்போம்.
எசாயா 7 : 14 ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்.
எசாயா 7 : 16 அந்தக் குழந்தை தீமையைத் தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்குமுன், உம்மை நடுநடுங்கச் செய்யும் அரசர்கள் இருவரின் நாடுகளும் பாலை நிலமாக்கப்படும்.
இவை யாவும் ஏசாயா இறைவாக்கினர் முன்னறிவித்த வசனங்கள் ...
எசாயா 7 : 14 ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்.
எசாயா 7 : 16 அந்தக் குழந்தை தீமையைத் தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்குமுன், உம்மை நடுநடுங்கச் செய்யும் அரசர்கள் இருவரின் நாடுகளும் பாலை நிலமாக்கப்படும்.
இவை யாவும் ஏசாயா இறைவாக்கினர் முன்னறிவித்த வசனங்கள் ...
மத்தேயு 1 : 21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து
மீட்பார்"; என்றார்.
மத்தேயு 1 : 25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு உறவு கொள்ளவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.
லூக்காஸ் 1 : 31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.
லூக்காஸ் 2 : 21 குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின்
வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.
புதிய ஏற்ப்பாட்டில் உள்ள வசனங்கள்..
முதலில் "இம்மானுவேல்" என்றால் என்ன என்பதை அறியவேண்டும். இந்த
பெயருக்கு "இறைவன் நம்மோடு இருக்கிறார்" என்று பொருள் கொள்ளலாம்.
עִמָּנוּאֵל
என்ற எபிரேய வார்த்தைக்கு இம்மானு (עִמָּ֥נוּ) + எல் (אֵֽל׃) "எல் என்றால் இறைவன் " எல் நம்மோடு இருக்கிறார். அதாவது இறைவன் நம்மோடு
இருக்கிறார்.
இயேசுவுக்கு அதிகமான பெயர்கள் உண்டு ஆனால் அந்த பெயர்கள் எவையும் அவருக்கு இடவில்லை. மாறாக இயேசுவுக்கு "இயேசு" என்று பெயர்
இடவேண்டும் என்று அந்த தருணத்தில் அறிவிக்கபட்டதைதான் அவருக்கு
இயேசு என்று பெயரிடப்பட்டது. எசாயா 9 : 6 ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ "வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்" என்று அழைக்கப்படும்.
லூக்கா 1
32 அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு
அளிப்பார்.
35 வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது
வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.
76 குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
இந்த பெயர்கள் யாவற்றையும் இயேசுவுக்கு இடவில்லையே ஏன்..?? இந்த பெயர்கள் அனைத்தும் அவரை
குறிக்கும் சொற்கள் ஆகையால் அந்த பெயர்களையே அவருக்கு இடவேண்டும் என்ற காட்டாயமோ அல்லது நிர்ப்பந்தமோ இல்லை.
இறைவன் நம்மோடு இருக்கிறார் என்பதுதான் "இம்மானுவேல்" ஆகையால்
இயேசுதான் இறைவன் என்று பொருள் கொடுக்கப்படுகிறது. இறைவன் மனிதனாக
இயேசுவாக பிறந்து நம்மோடு இருக்கிறார் இப்பொழுதும் இருந்துகொண்டே
இருக்கிறார். என்றும் இருக்கிறார். இயேசு மனித சதையுள்ள
இறைவன். இறைவன் நம்மோடு இருக்கிறார் என்பதற்கு விளக்கமாக ....
யோவான் 1 : 1 தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது;
2 வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.
3 அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.
4 அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது.
5 அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.
10 ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை
அறிந்து கொள்ளவில்லை.
11 அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை
ஏற்றுக்கொள்ளவில்லை.
12 அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின்
பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்.
13 அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள்
அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.
14 வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்;மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.
இயேசுவுக்கு இம்மானுவேல் என்று பெயரிடவில்லை மாறாக அந்த பெயருக்கு விளக்கமாக அல்லது இலக்கணமாக இருந்தார். இயேசுவே இம்மானுவேல்
இயேசுவே இறைவன். இறைவனே மண்ணிலே மனிதனாக இருந்தார்
இம்மானுவேல் = இறைவன் நம்மோடு இருக்கிறார்.
இயேசு = இறைவன்
வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக