சாம் ஷமான் --- http://www.answering-islam.org/tamil/authors/sam-shamoun/16.html
அஹமத் தீதத் மற்றும் ஜாகிர் நாயக் போன்ற இஸ்லாமிய
அறிஞர்கள், கிறிஸ்தவத்திற்கு எதிராக வாதம் புரியும் போது, பொதுவாக அவர்கள்
பயன்படுத்தும் ஒரு யுக்தி என்னவென்றால், மாற்கு 16ம் அதிகாரம் வசனங்கள் 14
லிருந்து 18 வரை குறிப்பிட்டு கிறிஸ்தவர்களுக்கு சவால் விடுவார்கள்.
முக்கியமாக, இயேசு தன்னை நம்புகிறவர்களுக்கு உறுதி அளிக்கும் வண்ணமாக,
"தன்னை நம்புகிறவர்களுக்கு எந்த சேதமும் வராது, அதாவது விஷத்தை
குடித்தாலும் உங்களை அது ஒன்றும் செய்யாது" என்றுச் சொன்ன வசனங்களை
இஸ்லாமிய அறிஞர்கள் மேற்கோள் காட்டுவார்கள்.