இயேசு தன்னைத்தானே ஏன் காப்பாற்ற இயலவில்லை ..??
இந்த கேள்வி ஒரு இந்து நண்பரால் கேட்கப்பட்டது. இயேசு ஏன் தன்னைத்தானே காப்பாற்ற இயலவில்லை என்று இப்பொழுது மட்டும் அல்ல
இயேசுவிடமே நேரடியாக கேட்டனர். நீங்கள் கேட்கும் கேள்வி
ஒன்றும் புதிதல்ல...!!
லூக்கா நற்செய்தி :23:37
' நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள் ' என்று எள்ளி நகையாடினர்.
மத்தேயு நற்செய்தி :27:40
நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா ' என்று அவரைப் பழித்துரைத்தார்கள்.
மத்தேயு நற்செய்தி :27:42
அவர்கள், ' பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம்.
மாற்கு நற்செய்தி :15:30
சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே விடுவித்துக்கொள் ' என்று அவரைப் பழித்துரைத்தார்கள்.
மாற்கு நற்செய்தி :15:32
அவர்கள், ' இஸ்ரயேலின் அரசனாகிய மெசியா இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்; அப்போது நாங்கள் கண்டு நம்புவோம் ' என்றார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவர்களும் அவரை இகழ்ந்தார்கள்.
லூக்கா நற்செய்தி :23:39
சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், ' நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று ' என்று அவரைப் பழித்துரைத்தான்.
இந்த மாதிரியான கேள்விகள் கேட்போர் தந்திரமாக கேட்கிறோம் என்று நினைத்தாலும் அது கிறிஸ்தவர்களுக்கு புதிதல்ல. காரணம் அதை
ஏற்க்கனவே இயேசுவிடம் நேரடியாகவே கேட்டுள்ளனர்.
யோவான் நற்செய்தி :15:13
தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.
நாம் வாழும் இந்த அழிகின்ற உலகத்தில் ஒருவன் தன நண்பனுக்காக தன உயிரையே கொடுக்கும் அன்பைவிட சிறந்த அன்பு வேறெதுவும் இல்லை. இப்படிப்பட்ட நண்பர்கள் உலகில் அரிதே.
யோவான் நற்செய்தி :3:16
தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும்
அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே
அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.
யோவான் நற்செய்தி :8:12
மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, ' உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில்
நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார் ' என்றார்.
இதன்
காரணமாகத்தான் இறைவன் உலகின் மீது அதிக அன்பு கொண்டு மனிதர்களின் பாவத்திற்காக
தன்னையே பலியாக கொடுத்தார்.
இயேசு ஏன் தன்னை காப்பாற்ற இயலவில்லை என்பதற்கு இரண்டு காரணங்கள் கூறலாம்...
இயேசு ஏன் தன்னை காப்பாற்ற இயலவில்லை என்பதற்கு இரண்டு காரணங்கள் கூறலாம்...
ஒன்று இயேசு
உலகின் (மக்களினம்) மீது அளவு கடந்த எந்த வார்த்தையாலும் வர்ணிக்க இயலாத அன்பு
கொண்டிருந்தார்.
யோவான் :3:16
தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.
இரண்டாவது மனிதர்களின் பாவங்களை போக்க.
யோவான் :3:16
தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.
இரண்டாவது மனிதர்களின் பாவங்களை போக்க.
உரோமையர் 3 : 25 இரத்தம் சிந்தி மனிதருடைய பாவத்துக்குக் கழுவாய் ஆகுமாறு இயேசுவைக் கடவுள் நியமித்தார். எபிரேயர் 9 : 28 அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். 1 பேதுரு 2 : 24 சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள்
குணமடைந்துள்ளீர்கள். 1 யோவான் 3 : 5 பாவங்களை நீக்கவே அவர் தோன்றினார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரிடம் பாவம் இல்லை.
மனிதர்களின் பாவத்தை போக்கி சாத்தானை முறியடிக்க இயேசு சிலுவையில் இருந்து தன்னை காப்பாற்ற இயலவில்லை, அதே நேரத்தில் மனிதர்கள் மீது வைத்திருந்த அன்பும் அதை தடுத்தது. இயேசு தன்னை சிலுவையில் இருந்த காப்பாற்றி இருப்பாரெனில் அவர் உலகின் மீது கொண்டிருந்த அன்பு பொய்யாகி இருந்திருக்கும் மற்றும் மனிதர்களின் பாவமும் மன்னிக்கபட்டிருக்காது. சாத்தான் இந்த உலகின் மீது வெற்றி கொண்டிருப்பான்.
இயேசு தன்னை காப்பாற்றாமல் தன் உயிரை கொடுத்து மனிதர்களின் பாவத்திற்கு நீதி வழங்கி சாத்தனின் மீது வெற்றியும் மனிதர்களின்/உலகின் மீது கொண்ட அன்பையும் நிரூபித்தார்.
எதையும் கேள்வி கேட்பதற்கு முன் சிந்தியுங்கள்.. எதை பற்றி சிந்திப்பது..?? மனிதர்களாகிய நாம் நம்முடைய பாவத்தை பற்றி சிந்திக்க வேண்டும்... நாம் நம்முடைய பாவத்தை பற்றி சிந்தித்து தன்னை பாவி என்று உணராதவரையில் எவரும் இறைவனையும் அந்த இறைவன் மனிதனாக பிறந்த இயேசுவையும் அறிய இயலாது.
லூக்கா 18
10 "இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.
11 பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்; "கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரம் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்;
12 வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன். "
13 ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, "கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்" என்றார். "
14 இயேசு, "பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
இந்த இரண்டு நபர்கள் இறைவனிடம் வேண்டுதல் செய்கின்றனர் இவர்களில் நாம் இறைவனிடம் எப்படி வேண்டுகிறோம் அல்லது எந்த நிலையில் இருக்கிறோம் எபதை சிந்திக்க வேண்டும்.
முதலில் நாம் எப்படி பாவத்தில் இருந்து நம்மை காப்பாற்ற போகிறோம் என்பதை சிந்திப்போம்..!!!
நாம் "பரிசேயரா அல்லது வரிதண்டுபவரா"..??

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக