லேபிள்கள்

செவ்வாய், 17 டிசம்பர், 2013

2 நாளாகமம் 13:2



2 நாளாகமம் 13:2
இது எபிரேய மொழியில் உள்ள வார்த்தையில் புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல். எபிரேய மொழியில் "பாத் " என்ற சொல்லுக்கு சகோதரி என்று பொருள். இதே சொல் மூத்த தலை மகளையும் குறிக்கும் , அது போக அதிகமான முந்திய காலத்தில் உள்ள தலை முறைகளையும் குறிக்கும். எ. கா. 2 சாமுவேல் 1:24 ஏறத்தாழ 900 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளது இஸ்ரேல் உண்மையில் வாழ்ந்தது. இது தூரத்து பெண் வழீதோன்றல்கலையும் குறிக்கும்.



நம் கண்களை நன்கு திறந்து பார்க்கும் பொழுது இதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

2
நாளாகமம் 13:2 சரியாக சொல்கிறது உரியேல் மகள் மீக்காயா என்பவளே அவன் தாய். உரியெல் (அப்சலோம் மகள்) தாமரை மணக்கிறான் என்று வைத்து கொள்வோம். மிகாயா ரேஹபோமை மணக்கிறார் பின்னர் அபிஜாவை பெற்றெடுக்கிறார்கள். 2 நாளாகமம் 11:20 அவன் அப்சலோமின் மகள் மாக்காவை மணந்து கொண்டான். அவள் அவனுக்கு அபியா, அத்தாய், சீசா, செலோமித்து ஆகியோரைப் பெற்றெடுத்தாள். 1 அரசர்கள் 15: 2 அவன் எருசலேமில் மூன்று ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். அபிசலோமின் மகள் மாக்கா என்பவளே அவன் தாய்.

ஒரு தாய் மட்டுமே அதாவது நாம் சொல்வதில்லையா...

இவன் இவருடைய மகன் என்கிறோம் சில நேரங்களில் இவன் அவருடைய பேரன் என்கிறோம். இவற்றில் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்.

யூத முறைப்படி தாத்தாவை தந்தை என்றும் பாட்டியை தாய் என்றும் அழைப்பது வழக்கம். இஸ்ரேல் மக்கள் ஆபிரஹாமை தந்தை என்று அழைக்கிறார்கள்.

கீழே உள்ளவற்றை கவனிக்கவும்..

-----------------------------------------

அப்சலோம்/அபிசளோம்
-----------------------------------------
தாமார் & உரியேல்
----------------------------------------
ரேஹபோவோம் & மாக்கா/மிக்காயா
---------------------------------------
அபியா/அபிசா
--------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக